Thooriga Song Tamil lyrics from Navarasa
Name: Thooriga
Singers: Karthik
Music: A.R.Rahman, Karthik, Sundaramurthy KS, Govind Vasantha, Justin Prabhakaran
Lyrics: Madhan Karky, Soundararajan, Uma Devi
ஹேய்.. விழும் இதயம் ஏந்திப்பிடி
ஹேய்.. அதில் கனவை அள்ளிக்குடி
ஹேய்.. குறுஞ்சிறகு கோடி விரி வா..
என் இதழில் ஏறி சிரி.....
கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்...
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்....
தூரிகா.. என் தூரிகா..
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா.. என் சாரிகா..
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்.....
நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர் வரை நழுவி ஆழம் நனை
நீ என் உயிரில் நீயும் இனை
பியானோ பற்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்.....
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா.. என் தூரிகா..
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா.. என் சாரிகா..
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்......
தூரிகா.. என் தூரிகா..
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா.. என் சாரிகா..
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்......
காரிகா.. என் காரிகா..
இதழோடு தான் கூட தான்
தவித்திட காத்திடு.....
என சோதனை செய்கிறாய்
தூரிகா.. என் தூரிகா..
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்.....
![]() |

